என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?!'- தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கம் #Anbazhagan

தி.மு.க-வின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டிலே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.



இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச்சூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மறைவுக்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள், தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தி.மு.க கொடிகள் யாவும் ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அன்பழகன் தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் தனது வேதனையை உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்
`முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா...!' என தொடங்கும் அந்த பதிவு....
``திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது

https://diigo.com/0gtfkl
https://www.pearltrees.com/navinss#item288229063

சங்கப் பலகை சரிந்துவிட்டது...
இனமான இமயம் உடைந்துவிட்டது...
எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்
என்ன சொல்லித் தேற்றுவது?
எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை..
பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!

https://speakerdeck.com/navins

முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!
எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்!
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது...

Comments

Popular posts from this blog

Rajasthan BSTC Admit Card 2020 : राजस्थान प्री डीएलएड के एडमिट कार्ड जारी, ये रहा Direct Link

Salman Khan के फैंस को ट्विटर पर ख़ूब धो रहे हैं सिंगर-म्यूज़िशियन अमाल मलिक, जानिए वजह