க.அன்பழகன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி


திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் (98) இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி




 அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட 


முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தின் ஆஸ்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலிற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

కరోనాపై పోరాటం: రూ. 500 కోట్లు సాయం ప్రకటించిన రతన్ టాటా

maharashi

4 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்தது: கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை: மையம்தோறும் தலா 25 பேருக்கு செலுத்தப்பட்டது