4 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்தது: கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை: மையம்தோறும் தலா 25 பேருக்கு செலுத்தப்பட்டது
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது
Also Chck: http://www.thinaboomi.com/2020/12/28/135222.html
இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பதிவு செய்து கொள்ளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும். முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளில் யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்ற பட்டியல் மாநில வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்காளர்களை வரவழைப்பதுபோல திட்டமிட்டு ஆங்காங்கே மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் எத்தகைய குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக 2 நாட்கள் ஒத்திகையை செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் தலா 25 பேர் வீதம் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர். தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர். 30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடந்தது. விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூர் ஆரம்ப சுகாதார நிலை யம், பூர்ணா ஹார்ட் இன்ஸ்டிடியூட், பெனமலூர் அரசு மருத்துவமனை, பிரகாஷ் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இது நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதற்காக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment