4 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்தது: கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை: மையம்தோறும் தலா 25 பேருக்கு செலுத்தப்பட்டது
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது Also Chck: http://www.thinaboomi.com/2020/12/28/135222.html இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்...